TULASI
Botanical Name: Ocimum sanctum
English : Holy basil
Tamil : துளசி /வடவனம்
Malayalam : ലക്ഷ്മി തുളസി
Malayalam : ലക്ഷ്മി തുളസി
Hindi : तुलसी
நான் துளசியில் இருந்தே ஆரம்பிக்கிறேன். துளசி இந்தியாவை தாயகமாக கொண்ட மிக புனிதமான மருத்துவ செடி. இந்த பச்சை நிற துளசியை லக்ஷ்மி துளசி என்றும் சுத்தமான தமிழில் வடவனம், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா என்றும் கூறுவார்கள். துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். இச்செடியின் இலை, தண்டு, பூ மற்றும் வேர் என அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு. அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.
இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும்,பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்
தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி. நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி
உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை
அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும்
சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து
கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை
நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு
துளசி சாறு ஒரு சிறந்தநிவாரணி.
துளசி செடி முதன் முதலில் ஒரு செடி பிடுங்கி வந்து எங்கள் தோட்டத்தில் வைத்தோம். இப்பொழுது அதன் விதைகள் காற்றிலே பரவி எங்கள் தோட்டம் முழுவதும் பரவி இருக்கின்றது. அற்புதமான மணம் வீசுகிறது. இது போக எங்கள் தோட்டத்தில் இன்னும் 8 வகை துளசிகள் இருக்கின்றன. அதை பற்றி பின்னர் பார்க்கலாம்.
துளசி செடி முதன் முதலில் ஒரு செடி பிடுங்கி வந்து எங்கள் தோட்டத்தில் வைத்தோம். இப்பொழுது அதன் விதைகள் காற்றிலே பரவி எங்கள் தோட்டம் முழுவதும் பரவி இருக்கின்றது. அற்புதமான மணம் வீசுகிறது. இது போக எங்கள் தோட்டத்தில் இன்னும் 8 வகை துளசிகள் இருக்கின்றன. அதை பற்றி பின்னர் பார்க்கலாம்.
No comments:
Post a Comment