Friday, December 11, 2015

சிறுபீளை

Polpala Plant





Botanical Name:Aerva lanata
English : Polpala Plant / Mountain knotgrass
Tamil : சிறுபீளை
 Malayalam : ചെറൂള
Hindi : कपूरीजड़ी गोरखबूटी छाया


இது சிறு செடிவகையைச் சார்ந்தது. இந்தியாவில் ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில் இருக்கும்,ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும், பூக்கள் தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும். இதை பூளை, தேங்காய்ப்பூக் கீரை, சிறுகண்பீளை அல்லது  பூளாப்பூ என்பர். சங்கப்பாடல்களில் குறுப்பிடப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை பூவும் ஒன்று. 

பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. சிறு பீளையின் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.இது சிறு நீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும்செய்கை உடையது. சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம் மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு, பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிகமான ரத்தப் போக்கு முதலியவை குணமாகும். 

எங்கள் தோட்டத்தில் பொங்கல் மட்டுமல்ல வருடம் முழுவதும் பராமரித்து வருகிறோம். 

No comments:

Post a Comment