Friday, December 11, 2015

சிறுபீளை

Polpala Plant





Botanical Name:Aerva lanata
English : Polpala Plant / Mountain knotgrass
Tamil : சிறுபீளை
 Malayalam : ചെറൂള
Hindi : कपूरीजड़ी गोरखबूटी छाया


இது சிறு செடிவகையைச் சார்ந்தது. இந்தியாவில் ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில் இருக்கும்,ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும், பூக்கள் தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும். இதை பூளை, தேங்காய்ப்பூக் கீரை, சிறுகண்பீளை அல்லது  பூளாப்பூ என்பர். சங்கப்பாடல்களில் குறுப்பிடப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை பூவும் ஒன்று. 

பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. சிறு பீளையின் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.இது சிறு நீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும்செய்கை உடையது. சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம் மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு, பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிகமான ரத்தப் போக்கு முதலியவை குணமாகும். 

எங்கள் தோட்டத்தில் பொங்கல் மட்டுமல்ல வருடம் முழுவதும் பராமரித்து வருகிறோம். 

Tuesday, October 28, 2014

சித்தரத்தை


Galangal






Botanical NameAlpinia galangal
English : Snap Ginger/ Cardamon ginger/ Indian ginger/Thai ginger/Blue ginger/ Galangal
Tamil : சித்தரத்தை
Malayalam : വലിയ അരത്ത
Hindi : कुलंजन

நீங்கள் பார்ப்பது சித்தரத்தை செடியின் படங்கள். இது இஞ்சியின் குடும்பத்தை சேர்ந்தது. இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அலுசரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும். ஒரு கிழங்கு இருந்தால் போதும் நிறைய செடியை உருவாக்கி விடலாம்.

Monday, October 6, 2014

நந்தியாவட்டம்


East Indian rosebay






Botanical Name:Tabernaemontana divaricata
English : East Indian rosebay
Tamil : நந்தியாவட்டம்
Malayalam : നന്ത്യാർവട്ടം
Hindi : चमेली / चन्दिनी / तगर 

எங்கள் தோட்டத்தில் வளர்ந்து நிற்கும் நந்தியார் வட்டம் அல்லது நந்தியாவட்டம். இது ஒரு குறு மரம் போல வளரும் தன்மை கொண்டது. இது கண்கள் சம்மந்தமான நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது. ஒரே ஒரு செடிதான் வைத்திருக்கிறோம். சாதாரணமாக தமிழகம் எங்கும் காணப்படுவது இது. இதன் பூக்களை பூஜைக்கும் பயன்படுத்துவார்கள்.

பதிமுகம்


Padhimugam







Botanical Name:Caesalpinia Sappan
English : Sappan Wood /East Indian red wood
Tamil : பதிமுகம் /பதாங்கம்
Malayalam : കുചന്ദനം
Hindi : बकम/ पतंग

நீங்கள் பார்ப்பது பதிமுகம் என்னும் மூலிகை மரம். இது தமிழகத்தில் மிக குறைவாகவே காண முடியும். கேரளாவில் அதிக அளவில் உள்ளது. இதன் மரப்பட்டை இரத்தத்தை சுத்திகரிக்கும் வல்லமை கொண்டது. கேரளாவில் இதை தண்ணீரில் ஊறவைத்து பருகுகிறார்கள், காரணம் இது தண்ணீரையும் சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.  

Friday, September 19, 2014

மூலிகை தோட்டம்


Herbal Garden



இந்த மாதம் தான் கொஞ்சம் செலவு செய்து எங்கள் முகாமின் தலைவர் திரு. பௌலி அவர்களின் முயற்சியினால் மூலிகை தோட்டத்தில் நடை பாதை அமைக்கப்பட்டது. இப்பொழுது பார்க்க இன்னும் அழகாக தெரிகிறது மற்றும் சுற்றி பார்க்க வசதியாக இருக்கிறது. ஒவ்வொரு செடியின் முன்பு அந்த செடியின் விவரங்களை ப்ளெக்ஸ் போர்டில் வைத்துள்ளோம். ப்ளெக்ஸ் போர்டு வைப்பதற்காகவே சிமெண்ட்டினால் மூங்கில் கம்புகளை செய்து அழகு படுத்தியுள்ளோம். 

தற்பொழுது நிறைய புதிய செடிகள் பெரியகுளம் தோட்டகக்லை கல்லூரியில் இருந்தும் கேரளத்தில் உள்ள கஞ்சிகோடு ஊரில் இருக்கும் ஆயுர்வேத சாலை மூலிகை தோட்டத்தில் இருந்தும் கொண்டு வந்துள்ளோம். 

தற்பொழுது எல்லா புது வரவுகளையும் சேர்த்து 350 எண்ணிக்கையை தாண்டிவிட்டது. விரைவில் 1000 வகை செடிகள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. 


                                                                                              (முயற்சி தொடரும் )



தாட்பூட்பழம்


Passion fruit





Botanical Name:Passiflora edulis
English : Passion fruit
Tamil : தாட்பூட்பழம்
Malayalam : പാഷൻ ഫ്രൂട്ട്
Hindi : जुनून फल

தோட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் தாட் பூட் பழத்தின் கொடியை பார்க்கிறீர்கள். இப்பொழுதுதான் பூ பூக்க ஆரம்பிக்கிறது. மிக அற்புதமாக படர்ந்து ஒரு பந்தல் போல படரும் மற்றும் இதன் பழம் ஆரஞ்சு பழம் அளவுக்கு இருக்கும். அற்புதமான சுவை உடைய இதன் பழம் மருத்துவ குணம் உடையது. 

Thursday, September 4, 2014

தும்பை


Common Leucas





Botanical Name:Leucas aspera
English : Common Leucas/ Spreng
Tamil : தும்பை
Malayalam : തുമ്പ
Hindi : छोटाहल्कुसा







நாங்கள் நட்ட தும்பை பூ செடியின் படங்கள். ஒரே ஒரு செடி தான் வைத்தோம். இப்பொழுது பரவி வளர்ந்துள்ளது. நமக்கு மிக பழக்கப்பட்ட மற்றும் மிக அருகாமையில் கிடைக்ககூடிய இந்த அற்புதமான மருத்துவ செடியை நாம் மறந்து வெகு நாட்களாகி விட்டது. சற்று முன் வருடங்கள் வரை இது கிராமங்களில் மருந்தாக பயன் படுத்தப்பட்ட செடி. நாம் இது மழைக்காலத்தில் வளர்ந்தவுடன் இதன் மீது தேனுக்காக அமரும் வண்ணத்துபூச்சியை பிடித்தும் அதன் வெண்மையான பூக்களை வாயில் வைத்து அதன் இனிப்பு சுவைக்காக உறிஞ்சும் விளையாடிய நாட்கள் இந்த தலைமுறைக்கு தெரியுமா என்பது கேள்விக்குறியே.

எங்கள் தோட்டத்தில் இது மழைகாலம் மட்டுமல்ல வருடம் முழுதும் இந்த செடி வளரும்படி பராமரித்து வருகிறோம். 'தும்பை போன்ற மனம் கொண்ட, தும்பை பூ நிறத்தில் ஆடையும்' உடுத்திய என்ற உருவகங்கள் கொண்ட இந்த செடியை காப்போமாக....


                                                  (வாசம் வீசும்...)