Friday, September 19, 2014

மூலிகை தோட்டம்


Herbal Garden



இந்த மாதம் தான் கொஞ்சம் செலவு செய்து எங்கள் முகாமின் தலைவர் திரு. பௌலி அவர்களின் முயற்சியினால் மூலிகை தோட்டத்தில் நடை பாதை அமைக்கப்பட்டது. இப்பொழுது பார்க்க இன்னும் அழகாக தெரிகிறது மற்றும் சுற்றி பார்க்க வசதியாக இருக்கிறது. ஒவ்வொரு செடியின் முன்பு அந்த செடியின் விவரங்களை ப்ளெக்ஸ் போர்டில் வைத்துள்ளோம். ப்ளெக்ஸ் போர்டு வைப்பதற்காகவே சிமெண்ட்டினால் மூங்கில் கம்புகளை செய்து அழகு படுத்தியுள்ளோம். 

தற்பொழுது நிறைய புதிய செடிகள் பெரியகுளம் தோட்டகக்லை கல்லூரியில் இருந்தும் கேரளத்தில் உள்ள கஞ்சிகோடு ஊரில் இருக்கும் ஆயுர்வேத சாலை மூலிகை தோட்டத்தில் இருந்தும் கொண்டு வந்துள்ளோம். 

தற்பொழுது எல்லா புது வரவுகளையும் சேர்த்து 350 எண்ணிக்கையை தாண்டிவிட்டது. விரைவில் 1000 வகை செடிகள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. 


                                                                                              (முயற்சி தொடரும் )



தாட்பூட்பழம்


Passion fruit





Botanical Name:Passiflora edulis
English : Passion fruit
Tamil : தாட்பூட்பழம்
Malayalam : പാഷൻ ഫ്രൂട്ട്
Hindi : जुनून फल

தோட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் தாட் பூட் பழத்தின் கொடியை பார்க்கிறீர்கள். இப்பொழுதுதான் பூ பூக்க ஆரம்பிக்கிறது. மிக அற்புதமாக படர்ந்து ஒரு பந்தல் போல படரும் மற்றும் இதன் பழம் ஆரஞ்சு பழம் அளவுக்கு இருக்கும். அற்புதமான சுவை உடைய இதன் பழம் மருத்துவ குணம் உடையது. 

Thursday, September 4, 2014

தும்பை


Common Leucas





Botanical Name:Leucas aspera
English : Common Leucas/ Spreng
Tamil : தும்பை
Malayalam : തുമ്പ
Hindi : छोटाहल्कुसा







நாங்கள் நட்ட தும்பை பூ செடியின் படங்கள். ஒரே ஒரு செடி தான் வைத்தோம். இப்பொழுது பரவி வளர்ந்துள்ளது. நமக்கு மிக பழக்கப்பட்ட மற்றும் மிக அருகாமையில் கிடைக்ககூடிய இந்த அற்புதமான மருத்துவ செடியை நாம் மறந்து வெகு நாட்களாகி விட்டது. சற்று முன் வருடங்கள் வரை இது கிராமங்களில் மருந்தாக பயன் படுத்தப்பட்ட செடி. நாம் இது மழைக்காலத்தில் வளர்ந்தவுடன் இதன் மீது தேனுக்காக அமரும் வண்ணத்துபூச்சியை பிடித்தும் அதன் வெண்மையான பூக்களை வாயில் வைத்து அதன் இனிப்பு சுவைக்காக உறிஞ்சும் விளையாடிய நாட்கள் இந்த தலைமுறைக்கு தெரியுமா என்பது கேள்விக்குறியே.

எங்கள் தோட்டத்தில் இது மழைகாலம் மட்டுமல்ல வருடம் முழுதும் இந்த செடி வளரும்படி பராமரித்து வருகிறோம். 'தும்பை போன்ற மனம் கொண்ட, தும்பை பூ நிறத்தில் ஆடையும்' உடுத்திய என்ற உருவகங்கள் கொண்ட இந்த செடியை காப்போமாக....


                                                  (வாசம் வீசும்...)

முறிகூட்டி

Cemetery plant






Botanical Name:Hemigraphis colorata
English : Red-flame ivy/Cemetery plant
Tamil : முறிகூட்டி
Malayalam : മുറികൂടി / മുറിയാൻ പച്ച

நாங்கள் புதிதாக தோட்டத்தில் வைத்த முறிகூடி மருத்துவ செடி இது. கேரளாவில் இருந்து கொண்டு வந்தது. முறிந்தவைகளை கூட வைப்பதால் இதன் பெயர் முறி கூடி ஆனது.